திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எனக்கு யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள்" கண் கலங்கிய கூல் சுரேஷ்!
2001ம் ஆண்டு "சாக்லேட்" படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கூல் சுரேஷ். தொடர்ந்து காக்க காக்க, அலை, தேவதையைக் கண்டேன், ஆயுத எழுத்து, குசேலன், பாலம், படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக சிம்புவின் "மாநாடு" பட ரிலீசின் போது "சிம்புவின் மாநாடு, எல்லோரும் வழியை விடு" என்று பேசி பிரபலமானார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் கூல் சுரேஷ். அங்கு தற்போது போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த கஷ்டமான சம்பவங்களை பகிர்ந்து கொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் கூல் சுரேஷ், "என்னுடைய பெயரில் விஷக்கிருமி ஒருவர் சமூக வலைத்தளத்தில் சிம்புவை பற்றி அவதூறாக பேசி வந்தார். நான் சிம்புவுடன் நெருக்கமானவன் என்பதால், நான் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று அந்த நபர் அவ்வாறு பதிவுகள் இட்டுவந்தார்.
ஆனால் மாநாடு ரிலீஸின் போது நான் தியேட்டருக்கு போனபோது ரசிகர்கள் எல்லோரும் என்னால் தான் பிரச்சனை என்று முறைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள காரணமே எனக்கு யாராவது வாய்ப்பு தரமாட்டார்களா என்று தான்" என்று உருக்கமாக கூறினார்.