96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிக் பாஸை குறித்து தரகுறைவாக பேசிய கூழ் சுரேஷ்... கமல் செய்த காரியம்... வைரலாகும் ட்ரோல்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோவில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து தற்போது 7 ஆவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கூழ் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தரகுறைவாக பேசியுள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு தேவை இல்லை. எத்தனை கோடி கொடுத்தாலும் நான் போகமாட்டேன் என்று பேசியுள்ளார். மேலும் பிக் பாஸ் சின்ன சின்ன பொண்ணுங்களை எல்லாம் கூப்பிட்டு வந்து காலையில் போடப்படும் பாட்டிற்கு அரைகுறை ஆடையுடன் ஆட விடுகிறார்கள்.
பிக் பாஸ் டைட்டில் பட்டம் வாங்கி வெளியே வந்து யார் பெரிய இடத்திற்க்கு போயிருக்கிங்க சொல்லுங்க பார்க்கலாம் என்று எல்லாம் பேசி விட்டு தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு முதல் ஆளாக வந்துள்ளாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் கூல் சுரேஷ் இப்படி தரகுறைவாக பேசியதை பார்த்து தான் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.