தொகுப்பாலினியிடம் சில்மிஷம் செய்த கூல் சுரேஷ்.. பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்ன பத்திரிக்கையாளர்கள்.?



Cool Suresh Teased the Anchor

நடிகர் மன்சூர் அலிகான் நடித்த "சரக்கு" படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் ,போன்றோர் கலந்து கொண்டனர். கூல் சுரேஷ் அவர்கள் வழக்கமாக திரைப்பட பிரமோஷன்களில் பேட்டி கொடுக்கும் போது வித்தியாசமாக எதையாவது பேசி சர்ச்சையை கிளப்புவார்.

suresh

அதேபோல் இந்த இசை வெளியீட்டு விழாவிலும் விளையாட்டாக செய்வதாக நினைத்து பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் செய்த செயல் அனைவரையும் கோபத்துக்கு உள்ளாகியது .மேடையில் பேச தொடங்கிய கூல் சுரேஷ் திடீரென்று எனக்கு மாலை போட்டீர்கள் வெகு நேரமாக நின்று கொண்டிருக்கும் தொகுப்பாளினிக்கு யாரும் மாலை போடவில்லை"என்று கூறி தன் கழுத்தில் இருக்கும் மாலையை தொகுப்பாளினியின் கழுத்தில் போட்டு விட்டார்.

அவர் இப்படி செய்தது அங்கு இருக்கும் அனைவருக்கும் கோபத்தை உண்டாக்கியது. அத்தொகுப்பாளினியும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். உடனே தன் கழுத்தில் இருக்கும் மாலையை கழட்டிவிட்டு விலகி சென்றார். இதை பார்த்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் "கூல் சுரேஷ் உடனே தொகுப்பாளினிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினர் .

suresh

இதன்பின் மன்சூர் அலிகான் மேடைக்கு வந்து கூல் சுரேஷ் செய்தது தவறு இதற்கு அவரே பதில் கூற வேண்டும் என்று கூறினார். அதற்கு கூல் சுரேஷ் அவர்கள் தான் இதுவரை நகைச்சுவையாக மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன் என்றும் இது யார் மனதையும் புண்படுத்த அல்ல என்றும் தொகுப்பாளினிடம் மன்னிப்பு கேட்டார் . கூல் சுரேஷ் செய்த அந்த செயல் அரங்கத்தில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.