மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இசைப்புயலின் மாயாஜாலம்! பாடல்களை வெளியிட்ட கோப்ரா படக்குழு! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கோப்ரா'. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கோப்ரா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
#Isaipuyal magical! ❤️#Tharangini ➡️ https://t.co/YJJZoYMjKs#CobraJukeBox ➡️ https://t.co/yHQ8XYWiWc#ChiyaanVikram @arrahman @AjayGnanamuthu @7screenstudio @RedGiantMovies_ @Udhaystalin @IrfanPathan @SrinidhiShetty7 @mirnaliniravi @SonyMusicSouth#CobraFromAugust11 pic.twitter.com/6Z5aWB1JDN
— Seven Screen Studio (@7screenstudio) July 12, 2022
இந்நிலையில், கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இடம்பெற்றுள்ள தரங்கணி பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது அனைத்து பாடல்களையும் படக்குழு,
இசைப்புயலின் மாயாஜாலம்! என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.