மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா பயம்! 15 மாதங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிய பெண்கள்! மீட்ட போலீசார் கண்ட அதிர்ச்சி காட்சி!!
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயது நிறைந்த ஜான் பென்னி. இவரது மனைவி ருத்தம்மா. இவர்களுக்கு இரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜான் பென்னியும் அவரது மகனும் அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் ஜான் பென்னின் குடும்பத்தினர் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் பெண்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளனர். ஜான் பென்னி மற்றும் அவரது மகன் மட்டும் வீட்டை விட்டு வெளியே சென்று உணவு மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்துள்ளனர். மேலும் பக்கத்தில் பேசினால் கூட கொரோனா பரவிவிடும் என்ற பயத்தில் பெண்கள் மூன்று பேரும் கடந்த 15 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல், யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது பெண்கள் இருக்கும் நிலையை கண்ட அவர் இதுகுறித்து காவல்துறையினரிடம் கூறியுள்ளார். பின்னர் அங்கு விரைந்த போலீசார் அந்தப் பெண்களை வலுக்கட்டாயமாக வீட்டின் உள்ளே இருந்து வெளியே வரவழைத்து மீட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் சுமார் ஒன்றரை வருடங்களாகவே வீட்டிற்குள் முடங்கியிருந்த நிலையில் உடல்நிலை மெலிந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சோர்வுடன் இருந்துள்ளனர். பின்னர் அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூன்று பெண்களுக்கும் சூரிய ஒளியே படாத நிலையில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹீமோகுளோபினும் குறைந்ததால் மனநிலை குழம்பிய நிலையில் காணப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.