#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென படப்பிடிப்பு நிறுத்தம்! பெரும் பீதியில் கீர்த்தி சுரேஷ் பட குழுவினர்! ஏன்? என்னாச்சு?
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சூர்யா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அவருக்கு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சில படங்கள் கைவசம் உள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.
கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.