மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இந்த கிரிக்கெட் வீரரும் தளபதி ரசிகரோ.! வாரிசு படத்தை பார்த்து போடும் ஆட்டத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரன்களை குவித்து அதிரடி ஆட்டக்காரராக மிரட்டி வந்தவர் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடிய அவர் பல கஷ்டமான இலக்குகளையும் அசால்டாக தகர்த்தெறிந்து கலக்கினார். ஆனாலும் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதி மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.
சூர்யகுமார் யாதவ் நேற்று நடைபெற்ற போட்டியில் அரை சதம் அடித்து அவுட்டானர். ஐபிஎல் கனவு முடிவுக்கு வந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விமானத்தில் மும்பைக்கு கிளம்பினர். அப்பொழுது கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விமானத்தில், அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற வாரிசு படத்தை பார்த்து ரசித்து ஆடியபடி சென்றுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் நீங்களும் தளபதி ரசிகரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
SKY watching #Varisu 🔥 pic.twitter.com/yjrGNJyKLZ
— Ayyappan (@Ayyappan_1504) May 27, 2023