#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல கிரிக்கெட் வீரரை வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்த தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக விளையாடி ஏராளமான விக்கெட்டுகளை குவித்து அசத்தியவர் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. இவர் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகினார்.
வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.அவர் தனது இடது கையின் தோள்பட்டையில் தலைவா படத்தில் இடம்பெற்ற போஸை டாட்டூவாக குத்தியுள்ளார். அது இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சாரை எப்படியாவது சந்திக்க வேண்டுமென கூறியிருந்தார்.
Ulla vandha powera-di,
— Varun Chakaravarthy (@chakaravarthy29) November 17, 2020
Anna yaaru?…
THALAPATHY.. #vaathicoming#vaathiraid #master #ThalapathyVijay 🤩😘 pic.twitter.com/TFoPqxn65J
இந்த நிலையில் தற்போது அவரது கனவு நனவாகியுள்ளது. வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை அவரது அடையாறு இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் உள்ள வந்தா பவருடி.! அண்ணன் யாரு? தளபதி என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது