இது எப்படி சாத்தியம்... தனது முன்னாள் மனைவிக்கு எதிராக இசையமைப்பாளர் டி.இமான் வழக்கு... என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர் டி.இமான். ஆரம்பத்தில் சீரியல்களில் பின்னணி இசையமைத்த இவர் பின்னர் திரைப்படங்களில் இசையமைக்க தொடங்கினார். அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
டி. இமான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இமான் கடந்த 2018-ம் ஆண்டு தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் தற்போது தனது மனைவி மோனிகாவின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். அதில் எனது இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட்டும் என்னிடம் இருக்கும் நிலையில் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறி மோனிகா புது பாஸ்போர்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.

இது சட்டவிரோதமான செயல் எனவே தனது குழந்தைகளின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு மனு கொடுத்தேன்.ஆனால்,உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என்று அதிகாரி கூறினார். எனவே புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மனுவில் கூறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பாக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.