மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் அவர் பார்த்துகொள்வார்.. சிவகார்த்திகேயன் விவகாரம்.! மனம் திறந்த டி இமான்.!
தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன் என்ற டி.இமானின் பேட்டி சர்ச்சையாகவும், பலவித சந்தேகங்களுடன் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பட விழாவில் கலந்து கொண்ட டி.இமான் இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் டி.இமான்," நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்றும், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற போவதில்லை என்றும் கூறினார். இதைப்பற்றி விரிவாக கூற டி.இமானிடம் தொகுப்பாளர் கேட்டபோது தன் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அதைப்பற்றி எதுவும் வெளிப்படையாக கூற முடியாது என அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக மாறி பல தரப்பினரும் இதுகுறித்து கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று படவிழா ஒன்றில் கலந்துகொண்ட டி.இமானிடம், பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்களா?? என செய்தியாளர்கள் கேட்டபோது அவர், முற்றுப்புள்ளி வைக்க ஒன்றுமே இல்லை. இறைவன் இருக்கிறான். இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான். சரி எது, தவறு எது என மனிதர்களை தாண்டி இறைவனுக்கு தெரியும். அதனை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.