திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சரத்குமார்-ராதிகா குடும்பத்தில் இணைந்த தனுஷ்.. வைரலான புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
சினிமாவில் ஆரம்பம் பெரிதாக மக்களை கவனிக்கவில்லை என்றாலும், தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார் தனுஷ்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக இணையதளத்தில் பதிவிட்டனர்.
இதனை அடுத்து இருவரும் அவரவர் வழிகளில் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் நடிக்கப் போகும் படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி குடும்பப் புகைப்படம் மாதிரி இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.