திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடுத்த டி டி எப் வாசனாக போகிறாரா தனுஷின் மகன்.. சர்ச்சையான புகைப்படம்.!
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் "காதல் கொண்டேன்" படத்தில் நடித்தார். இதையடுத்து இவர் நடித்த "திருடா திருடி" படம் தான் இவருக்கு கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், மாரி, வேலையில்லா பட்டதாரி, அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, தமிழின் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்றுப் படமான "கேப்டன் மில்லர்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. மேலும் இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது 16 வயதாகும் தனுஷின் மூத்த மகன் யாத்ரா, இருசக்கர வாகனத்தில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் எப்படி இதை அனுமதித்தார் என்று ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.