மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தமாதிரி ட்ரெஸ்லாம் போடாதன்னு சொன்னாங்க - பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் அணிந்த உடைகுறித்து விஜய் டிவி DD பதிவு..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது பேச்சு திறனாலும், சுட்டித்தனத்தாலும் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவர் சிறந்த தொகுப்பாளிணிக்காக பலமுறை விருதுகளை பெற்றுள்ளார்.
சமீப காலமாகவே டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல டிராவல் பிரியரான இவர், அடிக்கடி சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மாலத்தீவிற்கு சென்று பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அத்துடன் சமீபத்தில் இவர் அந்தமானுக்கும் சுற்றுலா சென்று பீச் உடையில் கடற்கரையில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்திருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், புகைப்படத்தை பதிவிட்ட டிடி "ஆடையில் ஒன்றும் கிடையாது. நம் மனநிலையில் தான் உள்ளது. அந்தமானில் இருக்கும் ஒரு ஆண்கள் கூட இந்த உடையை அணிந்து கொண்ட எனக்கு பாதுகாப்பு இல்லாமலோ, அசௌகரியமான உணர்வையோ கொடுக்கவில்லை என்று கூறினார். மேலும் "உலக சுற்றுலா தினமான இன்று தனது கனவுகளை நோக்கி பயணம் செய்யும் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இப்படி உடை சுதந்திரம் குறித்து அடிக்கடி பதிவிட்டு வரும் டிடி, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கட்டிச்சென்ற புடவை குறித்தும் பதிவிட்டு இருந்தார். அதில், "பெரிய பார்டர் புடவையை அணையாதீர்கள். நீங்கள் குட்டையாக இருப்பீர்கள். இதனை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.
உங்களது மூளைக்குள் இருப்பது உங்கள் பழக்கவழக்கங்கள். உங்கள் வார்த்தைகள் தான். உங்களை நீங்களே உருவாக்க உயரமாக இருங்கள். உங்கள் உடல் உயரம் அல்ல. அனைவரது அன்புக்கும் நன்றி" என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.