மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இறந்து ஆறு மாதங்களாகி, அழுகிய நிலையில் பிரபல நடிகரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.! வெளியான அதிர்ச்சி தகவல்!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் நாகார்ஜுன். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் அவரது பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மஹாபப் நகர்,பப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கர் கொண்ட பண்ணை வீடு ஒன்றை நாகார்ஜுனா வாங்கிஇருந்தார். மேலும் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்த அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக அவர் சமீபத்தில் பணியாளர்கள் சிலரை அங்கு அனுப்பியுள்ளார்.
அப்பொழுது வீட்டின் உள்ளே துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்த பணியாளர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் உடல் பாகங்கள் எலும்புக்கூடாக ஆங்காங்கு கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த உடலை மீட்டுள்ளனர். மேலும் இறந்தது யார், எந்த ஊர் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டில் யாராவது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசாரால் சந்தேகம் அடையப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,