மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்த டிமாண்டி காலனி படத்தின் தயாரிப்பாளர்: காரணம் என்ன?.!
கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, யோகிபாபு உட்பட பலரின் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி.
பேய் படமாக உருவாகியிருந்த டிமாண்டி காலனி, ரூ.2 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.18 கோடியை கடந்து வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி, இன்று டிரைலர் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பாபி பாலசந்திரன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் தொடர்பாக பேசினார். அதனைதொடர்ந்து, திரைத்துறை விஷயங்கள் குறித்து கருத்து பரிமாறினார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டிமாண்டி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். இதனால் தான் மகிழ்ச்சியாக உணருவதாக பாபி தெரிவித்துள்ளார். பாபி பாலசந்திரன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.