திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நாக சைதன்யாவின் புதிய படத்திற்கு இசையமைக்கிறாரா தேவி ஸ்ரீ பிரசாத்!"
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். டி எஸ் பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர், இசையமைப்பாளராக மட்டுமல்லாது பின்னணி பாடகராகவும், மேலும் பாடலாசிரியராகவும் உள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது, நந்தி விருது, பத்து பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஏழு சைமா விருதுகள் மற்றும் ஐந்து சினிமா விருதுகளை வென்றுள்ளவர் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.
மேலும் பல இசை வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இந்நிலையில், கார்த்திகேயா படத்தின் இயக்குனர் சேன்டோ மோன்டடி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.