மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. வெளியான அசத்தல் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில், வெற்றிமாறன், சுதா கொங்காரா, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவர் தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையாக நடைபெற்றதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.