"18 வருட திருமண வாழ்க்கை செல்லாது.."!! விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்ற தனுஷ் - ஐஸ்வர்யா.!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் கடந்த 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் நன்றாக வாழ்ந்து யாத்ரா, லிங்கா என இரு மகன்களை பெற்றெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில 18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவரும் பிரிவதாக கூறி 2022 ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த தகவல் தமிழ் சினிமாவையும் ரஜினிகாந்த் குடும்பத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இதனை தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்தும் இரு மகன்களை மாறிமாறி பார்த்து வந்தனர். இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த 2 ஆண்டுகளுக்கு பின் சட்டப்பூர்வமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் 2004-ல் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். விரைவில் தனுஷ் - ஐஸ்வர்யா தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக சேர்ந்து வாழ்ந்த நட்சத்திர தம்பதியின் விவாகரத்து தொடர்பான வழக்கு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.