மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க... D50 திரைப்படத்திற்காக வெற்றி கூட்டணி அமைத்த தனுஷ்... அப்ப இவங்க தான் ஹீரோயினா.?
கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். வடசென்னை கதைக்களத்தை கொண்டு கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த உடனடியாக டி50 வேலைகளில் இறங்கிவிட்டார் இயக்குனர் மற்றும் நடிகரான தனுஷ்..
இந்தத் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்று பல்வேறு தகவல்கள் வெளியானாலும் அவருடன் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.