திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரீ-ரிலீஸான தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம்.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.!
சமீப காலமாக வெளியான போது ரசிகர்கள் பார்க்க தவறிய மற்றும் கொண்டாட தவறிய திரைப்படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒரு சில திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியான காலத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
ஆனால் தற்போது இந்தப் படத்தின் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, இதுபோன்ற திரைப்படத்தை தற்போது எடுக்க முடியாது என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Day 2: #Pudhupettai Re release Celebration 🥳🔥#CaptainMiller @dhanushkraja pic.twitter.com/wO71b82Xar
— . (@Raghuvaran_07) November 4, 2023
இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கு ஒன்றில் புதுப்பேட்டை திரைப்படம் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.