திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சு அசல் அப்படியே தனுஷ் போலவே இருக்கும் அவரது மூத்த மகன்!! வைரல் புகைப்படம் ..
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான வாத்தி படமானது வருகிற 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தனுஷுடன் இதற்கு முன் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் குமாரே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். யாத்ரா மற்றும் லிங்கா இடையே தனுஷ் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் மகன்களின் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், அவரது மூத்த மகன் பார்ப்பதற்கு அப்படியே தனுஷ் போலவே இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.
வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, "இப்படத்தின் கதையை தனுஷ் சாரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னதையே பெரிய சாதனையாகவே நான் பார்க்கிறேன். கதையை முழுவதும் கூறிய பிறகு ஒன்றும் கூறாமல் கைகளை மட்டும் தட்டி, டேட்ஸ் எப்போது கொடுக்கட்டும் என தெலுங்கில் என்னிடம் கேட்டார்.
அவர் தெலுங்கில் பேசியதை கேட்டு மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன். அவர் பேசிய தருணத்தை என்னால் எப்போதுமே மறக்க முடியாது" என்று மகிழ்ச்சியாக கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஜிவி பிரகாஷ், " எங்கள் இருவருக்குமிடையே யார் அதிர்ஷ்டசாலி என புரியவில்லை. தனுஷ் தேசிய விருது வாங்கிய 2 படங்களிலும் நான்தான் இசையமைப்பாளர் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
அத்துடன், மீண்டும் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படங்களில் மீண்டும் அவருடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆடுகளம் படத்திற்காக தனுஷ் பெற்றுள்ளார். மேலும் கடந்த 2020ல் அசுரன் படத்திற்காகவும் பெற்றுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக இருந்தது ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.