#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆமா..உண்மைதான்! அந்த அதிர்ஷ்டசாலி நான்தான்! உண்மையை உடைத்த நடிகர் தனுஷ்! என்ன விஷயம் தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் மிரட்டி வருகிறார். நடிகர் தனுஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தனுஷ் கைவசம் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் மற்றும் பல திரைப்படங்கள் உள்ளன. மேலும் அவர் ராக்கி, சாணி காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் அதனை உறுதிசெய்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Thank you so much for the trust @dhanushkraja 🙏🏾 I am humbled and truly honoured for your kind words..
— Arun Matheswaran (@ArunMatheswaran) December 24, 2021
I am the fortunate one here. Looking forward to this big journey !🤗🤗🙏🏾🙏🏾 https://t.co/d6Xf8JrIvO
அதில் அவர், ஆம், உண்மைதான். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை கைப்பற்றிய அதிர்ஷ்டசாலி நடிகர் நான்தான். மேலும் தகவல்கள் விரைவில். ஓம் நமசிவாயா என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இந்த நம்பிக்கைக்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு கிடைத்த பெருமை. நான்தான் அதிர்ஷ்டசாலி. இந்த பெரிய பயணத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.