தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
தெறி பட வில்லன், நடிகர் ரோபோ ஷங்கரின் மகளுக்கு என்ன உறவுமுறை தெரியுமா? மிரண்டுபோன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீனா. இந்த படத்தை தொடர்ந்து அவர் தமிழில் வெளியான பல படங்களில் கொடூர வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் அவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமாகி சினிமாத்துறையில் கலக்கிவரும் நடிகர் ரோபோ ஷங்கரின் மச்சான் ஆவார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தீனாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதனை முன்னிட்டு ரோபோசங்கரின் மகளும், பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இந்திரஜா, தனது தாயுக்கும் மேலான தாய்மாமன் தீனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மிகவும் உணர்வுபூர்வமாக, உங்களை முதல் முதலில் பார்த்தபொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் "அப்பா". தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என கூறியுள்ளார்.