பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"துருவ நட்சத்திரம் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமா?! குழப்பத்தில் ரசிகர்கள்..
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "துருவ நட்சத்திரம்". மேலும் இப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ் கிருஷ்ணன், பார்த்திபன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2017ம் ஆண்டே எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தொடர்ந்து சில பல காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த நவம்பர் 24ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மீண்டும் படம் வெளியாவதில் தாமதமாகியுள்ளது. மேலும் இப்படத்தின் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றும், ஒழுங்காக வியாபாரம் நடந்திருந்தால் 50கோடிக்கு மேல் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்போது மொத்தம் 60கோடி இருந்தால் தான் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டு கெளதம் மேனன் படத்தை வெளியிடத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.