#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட்டப்பகலில், உச்சி வெயிலில் மாஸ்க் அணிந்து பொது இடத்தில் சரக்கு பாட்டில் வாங்கிய நடிகை ரகுல் ப்ரீத்சிங்க்..! வைரலானா வீடியோ..! நடிகையின் காட்டமான பதில்.!
கெளதம் கார்த்தி நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இந்த படம் இவருக்கு போதிய அளவு வரவேற்பை கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் அம்மொழி படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்நிலையில் கார்த்தி நடித்த தீரன் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த இவர் தீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் பிரபலமாக இருக்கும் இவர் ஊரடங்கு என்பதால் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். இந்நிலையில் ரகுல் ப்ரீத்சிங் கடை ஒன்றில் இருந்து வெளியே வருவதுபோலவும், அவரது கையில் மதுபாட்டில் இருப்பதுபோலவும் வீடியோ ஓன்று வெளியாகி வரைலானது.
அந்த வீடியோவில் ரகுல் ப்ரீத் மதுக்கடையில் இருந்து வெளியே வருகிறாரா என தலைப்பு வேறு போடப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரகுல், அருகில் இருப்பது மெடிக்கல் ஷாப் எனவும், மெடிக்கல் ஷாப்பில் மதுபாட்டில் விற்பார்களா எனவும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.
Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol 🤔😂😂 https://t.co/3PLYDvtKr0
— Rakul Singh (@Rakulpreet) May 7, 2020