மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் ஓட்டு ரட்சிதாவிற்கே.! ஆதரவாக நிற்கும் பிரபலம்.! ஒருவேளை அது நடந்திருமோ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளார், ஷெரினா, நிவாஷினி மற்றும் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருபவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான ரட்சிதா. அவரது கணவர் தினேஷ். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிய போவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதிலிருந்து ரட்சிதாவிற்கு ஆதரவாக அவர் பல கருத்துகளை கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில், இதுபோல ஏராளமான இதயங்களை வென்றுகொண்டே இருங்கள். நீங்கள் புறம்பேசுபவர்கள், விஸ்வாசமற்ற நண்பர்கள், தேவையற்ற கதைகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். ரசிகர்களின் விருப்பப்படி இறுதியில் வெற்றி பெறுவீர்கள். எல்லோரையும் போல உங்கள் விளையாட்டை காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். ரட்சிதாவிற்கு ஆதரவளியுங்கள், ரட்சிதாவிற்கு ஓட்டு போடுங்கள். என் ஓட்டு ரட்சிதாவிற்கே என கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு ரட்சிதா அவரது கணவருடன் இணையவேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் அந்த பதிவில் அவர் மைனா நந்தினி, ஜனனி ஆகியோருக்கு ஓட்டு போடவேண்டாம் என்பது போலவும் குறிப்பிட்டுள்ளார்.