அடடே.. பிரபுவின் மகளை கரம்பிடித்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. குவியும் வாழ்த்துகள்.!!



director-adhik-ravichandran-marriage

 

தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஆதித் ரவிச்சந்திரன். இதனை தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்திற்கு பின்னர் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் 32 வயதாகும் நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார். 

இந்த திருமணத்திற்கு நேரில் சென்ற நடிகர் விஷால் புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி வருகின்றனர்.