#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் பிரபு வீட்டு மருமகனாகிறாரா இந்த பிளாக்பஸ்டர் பட இயக்குனர்?? தேதி குறிச்சாச்சா.! பரவும் தகவல்!!
தமிழ் நடிகர் ஜி.வி பிரகாஷை வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர்தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சிம்புவை வைத்து எடுக்கப்பட்ட அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் கூட்டணியில் வெளிவந்த
மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் கூட்டணியில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இவ்வேளையில் அவருக்கு நடிகர் திலகத்தின் பேத்தியுடன் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யா பிரபுவுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் முன்னிலையில் முன்னதாகவே நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.