#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளது" பிரபலத்தின் வைரல் பேச்சு.!?
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா இதுவரை நடித்ததிலேயே பெரிய பட்ஜெட் திரைப்படம் கங்குவாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி 'கங்குவா' திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக வருகிறது. இதனை அடுத்து சூர்யா சுதா கோங்கரா என்ற இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்கிறார். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கவிருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார் சூர்யா.
மேலும் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன் பட பிரச்சனையின் காரணமாக சூர்யா மற்றும் அமீர் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று இணையத்தில் சர்ச்சை கிளம்பியது. இப்படத்தின் இயக்குனரான வெற்றிமாறன் இது குறித்து பேசுகையில் அமீர் மற்றும் சூர்யா கண்டிப்பாக இணைந்து நடிப்பார்கள் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் சூர்யா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். " விருப்பு வெறுப்புகளை தாண்டி சூர்யாவை ஒரு நல்ல கலைஞனாக நான் மதிக்கிறேன் .அவருடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன் " என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அமீர் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.