திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஏ.ஆர். ரஹ்மான் குறித்து சர்ச்சையாக பேசிய அமீர்.. மீண்டும் விளக்கமளித்து பேட்டி.!
அமீர் இயக்கிய "பருத்திவீரன்" திரைப்படம் பற்றிய சர்ச்சை இன்னும் சூடு குறையாமல் தொடர்ந்து வருகிறது. சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் அமீருக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது ஏ. ஆர். ரஹ்மான் குறித்து அமீர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் "ஏ. ஆர். ரஹ்மான் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார்" என்று அமீர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது ரஹ்மான் ரசிகர்களிடம் அமீர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து அமீர் தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "பத்து வருடங்களுக்கு முன் ஏ. ஆர். ரஹ்மான் இல்லாத படங்களே இல்லை.
ஆனால் அது எல்லாமே பெரிய பட்ஜெட் படங்களாகத் தான் இருந்தது. ஆட்டோகிராப் போன்ற படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் ரஹ்மான் பற்றி கேட்டதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்" என்று அமீர் விளக்கமளித்துள்ளார்.