மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்யும்" இயக்குனர் அட்லீயின் பளீச் பேட்டி.!
இயக்குனர் அட்லீ "ஜவான்" திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ள இப்படம், கடந்த செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியானது.
தொடர்ந்து படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும், முதல் நாளிலேயே இத்திரைப்படம் 129.6 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. தொடர்ந்து 4ஆவது நாளில் 520கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தற்போது 11ஆவது நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது கவனித்தக்கது. இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்று இயக்குனர் அட்லீயை பேட்டி எடுத்தது. அதில் அட்லீயிடம் விருது குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அட்லீ அளித்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அந்த கேள்விக்கு அட்லீ, "திரைத்துறையில் பணியாற்றும் அனைவருக்குமே கோல்டன் க்ளோப், ஆஸ்கர், தேசிய விருது என்று எல்லா விருதுகள் மீதும் ஆசை இருக்கும். எனக்கும் ஜவான் படத்தை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல ஆசை உள்ளது" என்று அட்லீ கூறியுள்ளார்.