#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தை கண்டபடி திட்டிய இயக்குனர் பாலா.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவர் படங்களின் நடிப்பதற்கு பல நடிகர்கள், நடிகைகள் காத்துக் கொண்டுள்ளனர்.
இயக்குனர் பாலா முதன்முதலில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சேது' திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் ஹிட்டாகி தேசிய விருது பெற்றது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பாலாவிற்கு படங்களை இயக்கும் வாய்ப்பு குவிந்தது.
ஆனால் பாலா தமிழ் திரைப்படங்களில் மற்ற இயக்குனர்களைப் போல நடிகர், நடிகைகளை அழகாக காட்ட மாட்டார். இதற்கு மாற்றாக அழுக்கான உடை மற்றும் கருப்பான தோற்றத்தை உடைய நடிகர் நடிகைகளையே தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பார்.
இது போன்ற நிலையில், பாலா.இயக்கத்தில் 'நான் கடவுள்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முன்னதாக அஜித் தான் ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் அஜித்திற்கு நிறைய முடி இருக்க வேண்டும். உடம்பு ஜிம் பாடி போல இருக்க வேண்டும் என்று அஜித்திடம் கூறி நிறைய வளர்த்து விட்டு வர சொல்கிறார். ஒரு வருடம் கழித்து அஜித் அதே தோற்றத்தில் வந்து பாலாவிடம் கதையை சொல்லுங்க அப்புறம் நடிக்கிறேன் என்று கூறினாராம். இதற்கு பாலா அஜித்தின் மீது பயங்கர கோவமடைந்தது கை ஓங்கி விட்டாராம். இட்ச்செய்தி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியில் கூறியிருக்கிறார்.