மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல் ரசிகர்-னு சொன்னால் போதாது - மனம்திறந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.!
லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனம் தயாரிப்பில் உறியடி புகழ் விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபைட் கிளப். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக படக்குழு சமீபத்தில் கோபிநாத்துடன் பேட்டி அளித்திருந்தது.
அந்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், நல்ல நோக்கத்துடன் 10 பேர் குழுவாக வருகிறார்கள் என்றால், அவர்களை முன்னேற்ற உதவி செய்வதற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. கமல் சார் ரசிகர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். அவர் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வார்.
அது அவரின் பாதுகாப்புக்காக அவர் முதலீடு செய்தாலும், எஞ்சிய பணம் அனைத்தையும் அவர் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்வார். இயக்குனராக பணியாற்றுவதற்கு எனக்கு நல்ல சம்பளம் வருகிறது. அதனை எனக்கு தெரிந்தவர்களுக்கு படம் எடுக்க வாய்ப்பு கொடுத்து உதவி செய்கிறேன்.
#கமல் சார் ரசிகர்னு சொன்ன மட்டும் போதாது அவர போல சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்ல போடாம சினிமாலயே போடனும், நாலு பேருக்கு வாய்ப்பு கொடுத்து நல்ல படங்களை தயாரிக்கனும், ஆண்டவன் புண்ணியத்துல படங்கள் இயக்கி நல்ல சம்பளம் வருது அதுவே எனக்கு போதும் - @Dir_Lokesh🔥#KamalHaasan pic.twitter.com/RcVpznaa0E
— SundaR KamaL (@Kamaladdict7) December 14, 2023
நான் வேலை செய்ய தொடங்கும் போது என்னிடம் நேர்மை, கடின உழைப்பு இதை தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. இன்று பொருளாதார ரீதியாக தேவைப்படுவோருக்கு நான் நல்ல நிலைக்கு வந்ததும் உதவி செய்ய நினைக்கிறேன் என்று கூறினார். லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் தனது முதல் படமாக ஃபைட் கிளப் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.