மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை மாற்றி அமைத்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதை தவிர்த்து வரும் ரசிகர்கள்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் பல படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதலாம் பாகம் கடந்த வருடம் திரையரங்கில் ஓடி நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பல எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான வரலாற்றை மணிரத்தினம் படத்தில் மாற்றி அமைத்திருக்கிறார் என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.
முதலாவதாக, இளமைப் பருவத்தில் நந்தினி மற்றும் ஆதித்த கரிகாலனின் காதல் கதை ஆழமானது. இதை மணிரத்தினம் அந்த அளவிற்கு படத்தில் சொல்லவில்லை. இரண்டாவதாக, நந்தினியின் கதாபாத்திரத்தை அந்த அளவிற்கு பெரிதாக எடுத்துக்காட்டவில்லை.
மூன்றாவதாக, ஆதித்ய கரிகாலனை யார் கொன்றது என்பதை சந்தேகத்துடன் முடித்து இருப்பார் கல்கி. ஆனால் இப்படத்தில் நந்தினி எனும் பெண்ணால் தான் அவர் இறந்தார் என்பது போல் தவறாக காட்டியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வர வைத்திருக்கிறது. இதேபோல் சைத்தான் அமுதன் கதாபாத்திரத்தையும் பெரிதாக காட்டவில்லை. பொன்னியின் செல்வன் நாவலில் இருக்கும் கதைக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் கொஞ்சம் கூட ஒத்துவரவில்லை. இதற்கு இவர் படம் எடுக்காமல் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.