#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கல.. கண்ணீர் விட்டு அழுத மணிரத்தினம்.?
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இசை புயலாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் இசையமைத்து வருகிறார். இவர் இசைக்கென்று மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.
ஏ ஆர் ரகுமான் முதன்முதலில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
இது போன்ற நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பம்பாய்' படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அதாவது இப்படத்தில் ஹம்மா ஹம்மா என்ற பாடலுக்கு ஏ ஆர் ரகுமானை இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். அந்த பாடலின் ஷூட்டிங் தினத்தன்று ஏ ஆர் ரகுமான் மணிரத்னத்திடம் அந்த பாடலின் டியூன் இன்னும் ரெடியாகவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு கோபமடைந்த மணிரத்தினம், ஏ ஆர் ரகுமானை படத்தை விட்டு நீக்க முடிவு செய்தார். ஆனால் ஏ ஆர் ரகுமான் 'பம்பாய்' படத்தின் தீம் மியூசிக் ஹம்மா ஹம்மா பாடலுடன் இணைக்கலாம் என்று முடிவு செய்து அதை செய்தும் காட்டியிருக்கிறார். இந்த பாடலைக் கேட்டு ஆச்சரியமடைந்த மணிரத்தினம் ஆனந்த கண்ணீருடன் நீங்க இந்த அளவுக்கு பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல என்று ஏ ஆர் ரகுமானை பெருமையுடன் பேசியிருக்கிறார். இச்செய்தி தற்போது வைரலாகி வருகிறது.