மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடமாநில கோவில் பண்பாடுகளை சிதைக்கும் சதிவேலை? - இயக்குனர் மோகன் பரபரப்பு ட்விட்.!
பழைய வண்ணாரபேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் மோகன், சர்ச்சைகளுக்கு பெயர்போன இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார்.
அவர் சார்ந்த ஆதரவாளர்கள் மாற்றம் அவர் பதிவிடும் கருத்துக்கள், அதற்கு எதிர்தரப்பில் இருந்து பதிலளிக்கும் நபர்கள் என எப்போதும் சர்ச்சைக்குரிய வட்டாரத்திற்குள் சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறார். நிஜத்தில் எளிய நபராகவும் அறியப்படுகிறார்.
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், ஒரு மையத்தை சேர்ந்தவர்கள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வந்ததாக முன்னதாக ட்விட் பதிவு செய்திருந்தார். இதனிடையே, நேற்று சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் இருதரப்பு மோதல் ஏற்பட்டு கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "சித்திரைமாதத்தில் தமிழகம் முழுக்க நடக்கும் அம்மன் கோவில் திருவிழாக்களை, முக்கியமாக வடதமிழக கோவில் விழாக்களை தடுக்கவும், திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கி கோவில்களை மூடவும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு மைய அமைப்பினர் சதிதிட்டம் வகுத்துள்ளதை பத்திரிக்கையாளர் ஒருவர் மூலம் அறிந்தேன்..
அதனால் கோவில் நிர்வாகிகள் கவனமாக, நிதானமாக பேச்சுவார்த்தைகளை கையாளுங்கள். பங்காளி தகராறு போல உங்களுக்குள் இருக்கும் முரண்களை முன் வைத்து பேசினால், உங்கள் மரபு வழி வழிபாட்டை சிதைக்கும். அதனால் சதி வேலை செய்பவர்களை கண்டறிந்து ஊர்மக்களுடன் கலந்து திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கள்
— Mohan G Kshatriyan (@mohandreamer) May 3, 2024
அதனால் கோவில் நிர்வாகிகள் கவனமாக, நிதானமாக பேச்சுவார்த்தைகளை கையாளுங்கள். பங்காளி தகராறு போல உங்களுக்குள் இருக்கும் முரண்களை முன் வைத்து பேசினால், உங்கள் மரபு வழி வழிபாட்டை சிதைக்கும். அதனால் சதி வேலை செய்பவர்களை கண்டறிந்து ஊர்மக்களுடன் கலந்து திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கள்
முக்கியமாக திரெளபதி அம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் தான் குறி.. கவனமாக கையாண்டு மாற்று சமூக மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சூமூகமாக இணைந்து திருவிழாக்களை கொண்டாடுங்கள்.. பாரம்பரியம் காத்திடுங்கள்" என கூறியுள்ளார். இந்த பதிவுகள் பரபரப்பை உண்டாக்கி இருக்கின்றன.
அவர் யாரை குறிப்பிடுகிறார்? யார் அந்த பண்பாட்டு மையத்தினர் என்று உறுதிபட தெரியவில்லை. அவருடன் பயணிப்போருக்கு அத்தகைய கருத்துக்கள் புரியும் என ஒருதரப்பில் இருந்து தகவல் கிடைக்கிறது.
வடமாவட்டத்தில் இவ்வாறான விஷயங்கள் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தினாலும், தென்மாவட்டங்களில் ஜாதிய கொலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதால் அதிலும் கவனம் செலுத்த வேண்டும் என குரல்கள் எழுகின்றன.