உலகப்புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கலாச்சார சீரழிவு? - இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு குற்றச்சாட்டு.!



Director Mohan G Complaint about Shri Koothandavar Temple

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையான திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சிறப்பிக்கப்படுகிறது. இந்த திருவிழாவை கொண்ட திருநங்கைகள் பலரும் திரளாக வந்து பண்டிகையை சிறப்பிப்பார்கள். திருநங்கைகள் பெருவாரியாக கலந்துகொள்ளும் இத்திருவிழா, மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அரவானை பலிகொடுத்ததன் நினைவாக கொண்டாடப்படும் திருவிழாவாக இது கவனிக்கப்படுகிறது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் முதல்நாள் கோவில் பூசாரிகளிடம் இருந்து தாலியை கட்டிக்கொண்டு, பின் மறுநாளில் தாலி அறுப்பு நிகழ்ச்சியில் கதறி அழுது தங்களின் சோகத்தை வெளிப்படுத்துவார்கள். மகாபாரத கூற்றுகளின்படி போரில் வெற்றிபெற பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற மனிதப்பலி கொடுக்க வேண்டும். இதில் கிருஷ்ணர், அர்ஜுனன், அர்ஜுனரின் மகன் அரவான் ஆகியோர் தகுதி உடையவராக தேர்வு செய்யப்படுவார்கள். 

இவர்களில் அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் போருக்கு தேவை என்பதால், அரவான் பலி கொடுக்க முடிவு செய்யப்படும். அரவானும் அதனை ஏற்றுக்கொண்டு பாண்டவரின் வெற்றிக்காக தனது உயிர்பலியை வழங்குவார். தற்போது இவை அங்குள்ள திருவிழாக்களில் மரபாக நடைபெறுகிறது. ஆனால், சமீபகாலமாக என்.ஜி.ஓ அமைப்பு என்ற பெயரில் நாடாகும் கலாச்சார மாற்றத்தால் கூவாகம் திருவிழா மாற்றத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, திரைப்பட இயக்குனர் மோகன் ஜி என்.ஜி.ஓ என்ற பெயரில் நடைபெறும் கலாச்சார சீரழிவுகளை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என கூறியுள்ளார். இதுகுறித்த அவரின் எக்ஸ் பதிவில், "விழுப்புரம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா 2000 ஆண்டு பாரம்பரியம், ஒரு சமூகத்தின் வரலாறு, ஆனால் இன்று அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது, கலாச்சார சீர்கேட்டில் ஈடுபடும் சில NGO க்களின் சதி அம்பலப்பட்டால் மக்களின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது,

திருநங்கைகள் பொறுப்புணர்ந்து இந்த கலாச்சார மரபை காப்பற்ற முன் வர வேண்டும். மகாபாரத போரில் அரவான் களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில் நடக்கும் இந்த விழாவை அதை நோக்கி மட்டும் வரலாறு புரிந்து திருவிழா நடத்துமாறு இந்து அறநிலையத்துறையை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

ஆனால், அவரின் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர், நான் திண்டிவனத்தை சேர்ந்தவன் தான். நீங்கள் கூறுவது போல ஒரு மாற்றமும் இல்லை. அங்கு திருவிழா எப்போதும் போல நடைபெறுகிறது என கூறி இருக்கிறார்.