திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது பிரபல டிவி நிறுவனம்..!
நடிகர் ஆர்யா - இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம். இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, படம் வெளியீடுக்கு தயாராகியுள்ளது.
இந்த படத்தில் ஆர்யா, பிரபு, பாக்யராஜ், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் 31 ஜூலை 2023 அன்று வெளியாகிறது.
இந்த நிலையில், படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படம் ரிலீசுக்கு பின்னர் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.