பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஹிட் பட இயக்குனருக்கும் நடிகை ரம்பாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை.. இயக்குனர் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி !
1998ஆம் ஆண்டு செல்வபாரதி இயக்கத்தில் விஜய், ரம்பா, தேவயானி, வினுச்சக்ரவர்த்தி, மணிவண்ணன், சார்லி, சுந்தர்ராஜன், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைபடம் "நினைத்தேன் வந்தாய்". நகைச்சுவை காதல் திரைப்படமான படம், மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் செல்வபாரதி சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அவர், "நினைத்தேன் வந்தாய் படத்தின் போது எனக்கும், ரம்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது.
நான் எவ்வளவோ கூறியும், ரம்பா இந்தப் படத்தில் நடிக்காமல் வேறு படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். அறிமுக இயக்குனர் என்றால் இப்படி மதிக்காமல் நடந்துகொள்வதா? நான் சொல்லியும் என்னை மதிக்காமல் அவர் செல்லும்போது, நான் மட்டும் ஏன் திரும்ப அவரைக் கூப்பிட வேண்டும்?
அதனால் ரம்பாவிடம் இருந்து காஸ்டியூமை வாங்கிட்டு வர சொல்லி, ஒரு ஜூனியர் நடிகையை வைத்து 46 ஷாட்கள் ரம்பா இல்லாமலே அவர் காட்சிகளை எடுத்து முடித்தேன். இது யாருக்கும் தெரியாது. 'வண்ண நிலவே' பாடலில் ஊஞ்சலில் வருவது மட்டும் தான் ரம்பா. மற்ற அனைத்தும் ரம்பாவே இல்லை" என்று கூறினார்.