மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குநர் பா ரஞ்சித் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறாரா.? ஹீரோ யார் தெரியுமா.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் பா ரஞ்சித். இவர் தமிழில் முதன் முதலில் 'அட்டகத்தி' திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பின்பு மெட்ராஸ், கபாலி, பரியேறும் பெருமாள், நட்சத்திரம் நகர்கிறது, காலா போன்ற பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
தற்போது விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 'சார்பட்டா' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக கூறி வந்த நிலையில் தற்போது பா. ரஞ்சித் பாலிவுட் படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியில் உருவாகும் இப்படத்தை ஜார்க்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டவின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. பிர்சா என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை நமாஹ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் படத்தில் ரன்பீர் கபூர் தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது.
இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது, "நான் பாலிவுட்டில் படங்களை இயக்கப் போகிறேன். படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம் எல்லாம் உறுதியாகிவிட்டது. ஆனால் கதாநாயகன் யார் என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.