திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நயன்தாரா படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராததால் அந்த மாதிரி திட்டிட்டேன்" இயக்குனர் பார்த்திபனின் சர்ச்சையான பேச்சு..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும், தற்போது தனது திறமையின் மூலம் திரைத்துறையில் நிலைத்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார்.
மேலும் 'லேடி சூப்பர் ஸ்டார்' ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் மற்ற ஹீரோயின்களை விட அதிகமாக சம்பளம் நயன்தாரா தான் வாங்குகிறார். இவ்வாறு தனது நடிப்பு திறமை மூலம் படிப்படியாக முன்னேறியவர் நயன்தாரா.
நயன்தாரா நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதன் பின் வாடகை தாய் முறை மூலம் இரு ஆண் குழந்தைகளை தாயானார். இது போன்ற நிலையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் ஒரு பேட்டிகள் நயன்தாராவை குறித்து கூறியிருக்கிறார் .
பேட்டியில் பார்த்திபன் கூறியதாவது, "நான் இயக்கிய ஒரு படத்தில் நயன்தாரா படப்பிடிப்பு குறித்த நேரத்திற்கு வரவில்லை. அடுத்த நாள் போன் செய்து நேற்று வர முடியவில்லை. இன்னைக்கு வரவா என்று கேட்டார். நான் கோபத்தில் வரத் தேவையில்லை என்று திட்டி விட்டேன். ஆனால் இன்று தனது திறமையின் மூலம் முன்னேறி லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார் என்று பார்த்திபன் நெகழ்ச்சியுடன் பேட்டி அளித்தார்.