மெட்ராஸ் 'நாங்கதான்' பா. ரஞ்சித்தின் ஆதங்கம்; வெடிக்கும் இயக்குனர் பேரரசு..!



Director Perarasu about P Ranjith Madras Statement 

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மறைந்த தமிழ்நாடு மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் 16வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், திரைப்படங்களில் உள்ள வசனத்தைப்போல, தனது மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து இருந்தார். 

இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பா. ரஞ்சித்தின் கொள்கை எதிர்பாளர்களிடையே விமர்சனத்தை சந்தித்தது. திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி-யும் தனது பதில் ஒன்றை அளித்து இருந்தார். இதனிடையே, இந்த விஷயம் குறித்து இயக்குனர் பேரரசு தனது பதிலை அளித்துள்ளார். 

நாங்க என்பது யார்?

இயக்குனர் பேரரசு சென்னையில் அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பேசுகையில், "மெட்ராஸ் நாங்கதான் என்றால், அனைவர்க்கும் கோபம் தான் தான். எந்த அடிப்படையில் அவர் நாங்க தான் மெட்ராஸ் என கூறுகிறார். நாங்க என்பது யார்?. எங்களை பொறுத்தவரையில் தமிழர்களுக்கு மெட்ராஸ். நாங்க என்பதற்குள் ஜாதி, மதத்தை குறிக்கலாம். 

இதையும் படிங்க: காதல் பாடலா? பிட்டு படமா?.. பேட் நியூஸ் படத்தின் கவர்ச்சி பாடல்.. விழிபிதுங்கும் நெட்டிசன்கள்.!

நான் வெளியூரில் இருந்து இங்கு வந்தோம், திரைப்படத்துறையை கற்றுக்கொண்டு வாழ்ந்தோம். இயக்குனர் மோகன் ஜி சென்னையை சேர்ந்தவர். அவரின் கேள்விகளில் தவறு இல்லை. அரசியல் என்பது அரசியலாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் அரசியல்ரீதியாக கருத்துக்களை சொல்லலாம். பெண் என்பதால் அவர்களை அரசியலுக்கு வந்துவிட்டார் என இழிவுபடுத்துவது தவறானது" என பேசினார்.