திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ச்சே.. சாராயம் விக்கிற காசுல அரசை நடுத்துறாங்க., எவ்ளோ கேவலமான விஷயம் - கொந்தளிப்பில் இயக்குனர் பேரரசு..! வெளியான ரகசியம்..!!
மக்களின் வாக்குகள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பயம் கொள்கின்றன என இயக்குனர் பேசினார்.
மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மகளான விஜயலட்சுமி, மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு பேசுகையில், "மதுபான கடைகளை போல இனி வரும் நாட்களில் கஞ்சா கடைகளையும் அரசு திறக்குமா?. பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் ரூ.1000 தேவையில்லை.
ஓசி (இலவச) பேருந்து தேவையும். சாராயம் விற்பனை செய்த பணத்தில் அரசை நடத்துவது கேவலமான செயல். மக்கள் வாக்கு செலுத்தமாட்டார்கள் என அரசியல்வாதிகள் பயம் கொள்கிறார்கள்.
மக்கள் மீது தவறா? அரசு மீது தவறா? என்று விவாதம் நடத்தும் அளவு நிலை வந்துவிட்டது. அவர்களின் பேச்சுக்கு பயந்து குவாட்டரும், பிரயாணியும் வழங்கி வாக்கு கேட்கிறார்கள்" என்று பேசினார்.
NOTE : மாவீரன்பிள்ளை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசியவை மட்டுமே இங்கு பதிவிடப்பட்டுள்ளது.