தொடர்ந்து திருட்டு கதைகளை படமாக்கி சர்ச்சையில் சிக்கிய லவ் டுடே இயக்குனர்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்கள் எடுத்து யூடியூபில் வெளியிட்டு வந்தார். இந்த குரும்படங்கள் வைரலாகி முதன் முதலில் வெள்ளித்திரையில் 'கோமாளி' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. இதனையடுத்து இப்படத்தின் கதை திருடப்பட்டது என்ற சர்ச்சை திடீரென கிளம்பி பிரதீப் ரங்கநாதன் பிரச்சினைகளுக்கு உள்ளானார். இதிலிருந்து இயக்குனர் பாக்கியராஜ் தான் இந்த பிரச்சினையை தீர்த்தார் என்று கூறப்படுகிறது.
தற்போது 'லவ் டுடே' திரைப்படமும் காபி கதை தான் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் காதலனும் காதலியும் மொபைலை மாற்றிக் கொள்வது போல் கதை இருக்கும். இந்த கதை கவிஞர் அறிவுமதியின் கவிதையில் உள்ள வரிகளையே இவர் படமாக்கி இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இச்செய்தி இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதனை கலாய்த்து வருகின்றனர்.