#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் படத்திற்கு வந்த பெரும் சோதனை.! அதிர்ச்சியில் மூழ்கிய தளபதி ரசிகர்கள்!!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிகில். இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிகில் படத்தின் டிரெய்லர் கடந்த 12-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு மனு தொடர்ந்துள்ளார்.
மேலும் அவர் விளையாட்டை மையமாக கொண்டு 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்ததாகவும், அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதைத் திருடியே பிகில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனு அளித்துள்ளார்.