மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: இந்தியன் 2 படத்தை பார்த்து வியந்த கமல்ஹாசன்.. ஷங்கருக்கு ரூ.8 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கி நெகிழ்ச்சி.!
விக்ரமை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படமும் அமோக வெற்றியடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரகுமான், அனிருத் ரவிச்சந்தர் இசையில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நயன்தாரா, சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, யோகி பாபு உட்பட பலர் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் இந்தியன் 2.
ரூபாய் 250 கோடி பொருட் செலவில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் இசை சேர்ப்பு என அனைத்து பணிகளும் நடைபெற்ற முடிந்தது.
தற்போது நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்தை பார்த்து முடித்துள்ளார். திரைப்படம் சங்கரின் உச்சகட்ட படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், அவருக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து கமல் ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். இது உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதுதான் என் எண்ணம்.
இது உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை என்றாலும், இதனை உச்சமாக கொள்ளாமல் திமிரி எழ வேண்டும். பல உயரங்கள் தேடிச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B
விக்ரம் திரைப்படத்தின் போதும் என்னைப்போன்ற இயக்குனரை நான் கண்டேன். நான் தேடியதை அவர் கொடுத்தார் என லோகேஷ் கனகராஜை புகழ்ந்து, படத்தின் வெற்றிக்கு பின் அவருக்கு காரையும் பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ஷங்கர் மீண்டும் திரையில் தனது பிரம்மாண்டத்தை காண்பித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
#KamalHaasan Sir presented a Costly Panerai Watch to Director Shankar ⏱️🥰 #Indian2 💥🔥 pic.twitter.com/jOh2Ck3tSr
— Vijay HaasaN🖤💙 (@VijayHaasaN26) June 28, 2023