மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படியொரு சவாலான நடிகையை நான் பார்த்ததே இல்லை - மனம்திறந்த சுந்தர் சி.!
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா இயற், ரைசா வில்சன் நடித்து வரும் படம் காபி வித் காதல். இவர்களுடன் திரையுலக நட்சத்திரங்களான யோகி பாபு, கிங்ஸ்லி, பிரதாப் போத்தன்,விஸ்வநாத், திவ்யதர்ஷினி உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் அக் மாதம் 7 ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர் சி, "நான் நீண்ட ஆண்டுகளாக பீல்குட் படத்தை இயக்க ஆசைப்பட்டேன். அது ரசிகர்களுக்கு இன்ப சிரிப்பை பரிசாக வழங்க வேண்டும் என நினைத்தேன்.
எனது உள்ளதை அள்ளித்தா படத்தை அப்படியே தொடங்கினேன். நக்மா நாயகியாக அப்படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், கதை வேறு விதமாக மாறியதால் அது நிறைவேறாமல் போனது. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதே பாணியில் எடுத்து செல்ல நினைக்க, சந்தானம் வருகை படத்தின் ரூட்டையே மாற்றியது. காபி வித் காதல் எனது ஆசை நிறைவேறி இருக்கிறது.
மூன்று குணாதிசியத்துடன் உள்ள சகோதரர்களுக்கு இடையே ஏற்படும் காதல், குடும்ப பிரச்சனையை வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் 6 நாயகிகள் நடிக்கிறார்கள். யோகி பாபுவுக்கு ஸ்டைலிஷ் கதாபாத்திரம் இருக்கிறது. இதுவரையில் நான் பார்த்த நடிகையில் சவாலான நடிகை சம்யுக்தா.
அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய காட்சியை படமாக்குவது சவாலாக இருந்தது. ரைசாவை பார்க்கும் போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல இருப்பார். கேமரா முன்பு அவர் வந்ததும் மாறிவிடுவார். அம்ரிதா மற்றொரு நடிகைக்கு அதிக காட்சி கொடுக்கிறார்களோ என்று சந்தேகத்தில் இருப்பார்" என்று கலகலப்புடன் பேசினார்.