'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
"ஜெயம் ரவியால் தான் என் சினிமா வாழ்க்கையை தொலைத்தேன் " கண் கலங்கியபடி பேட்டியளித்த இயக்குனர் சுராஜ்..
கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுராஜ். இவர் தமிழில் மூவேந்தர், மிலிட்டரி, குங்குமபொட்டு கவுண்டர், படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இதில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன், மாப்பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு சுராஜ் மிகப்பெரிய வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இதன் பிறகு தனுஷை வைத்து 'சகலகலா வல்லவன்' எனும் திரைப்படத்தை இயக்கிய சுராஜ் திட்டமிட்டார்.
ஆனால் தனுசுக்கு கால்ஷீட் கிடைக்காததால் ஜெயம் ரவியை வைத்து 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தை இயக்கி முடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. படுதோல்வியை அடைந்தது.
இது போன்ற நிலையில், யூடூப் சேனலில் பேட்டி அளித்த இயக்குனர் சுராஜ், "ஜெயம் ரவியால் தான் என் சினிமா வாழ்க்கை அழிந்தது. தனுஷை வைத்து சகலகலா வல்லவன் படத்தை முடித்திருக்க வேண்டும். தப்பு செய்துவிட்டேன்" என்று கண் கலங்கியபடி பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.