திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த எஸ்.பி.பிக்காக ஏதாவது செய்யவேண்டுமென எண்ணினால் தயவுசெய்து இதை செய்யுங்க! உருக்கமாக பேசிய முக்கிய பிரபலம்!
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு எஸ்பிபி குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதில் கலந்துகொண்டு இயக்குனர் பி.வாசு கூறுகையில், எஸ்பிபி உலகையே அழவைத்துவிட்டு நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். என்னை எப்போதும் கண்ணா என்றே அழைப்பார். கடைசி வரை வாசு என்று கூப்பிட்டதே இல்லை.
நாம் அனைவரும் அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்தோம். ஆனால் கடவுள் அவரை கைவிட்டுவிட்டார் என வருத்தபட்டோம். நாம் மட்டும் அல்ல கடவுளே அவருக்கு ரசிகர்தான். அதனால்தான் சங்கரா என பாடிய எஸ்பிபியை தன் மடியில் அழைத்துக் கொண்டார்.
எஸ்பிபிக்கு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணினால்
தயாரிப்பாளர்களும், இசையமைப்பாளர்களும் சரணுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வாசு கூறியுள்ளார்.