மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஈடில்லா இழப்பு! இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி வீட்டில் நேர்ந்த துயரம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தார்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜாவின் சகோதர் கங்கை அமரன். இவரும் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார். இவருக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர்.
அவர்களில் மூத்த மகன் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். மேலும் இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். இருவருமே கலகலப்பாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.
இந்நிலையில், கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் அம்மாவுமான மணிமேகலை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிமேகலையின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இந்த தகவலை அறிந்த திரையுலக பிரபலங்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் அவர்களின் தந்தை கங்கை அமரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.